Wednesday, December 15, 2010

~~ வெற்றியைத்தேடி ~~

தினமும் வாழ்ந்த
வாழ்க்கை போதும்
புதிதாய் ஒன்றை
திறம்பட செய்வோம் !!
வானம் எதுவரை
தொட்டு பார்ப்போம்
பூமி புதையலும்
தேடி எடுப்போம் !!
கவனம் குறையாமல்
லட்சியத்தில் உழைப்போம்
வெற்றி நம்மை
சுற்றித் திரியும் !!

Tuesday, December 14, 2010

~~ தளராத போராட்டம் ~~

சில சமயம்
மனதும் அறிவும்
மோதிக்கொள்ளும்
மனம் பயணிப்பது சரியா ?
அறிவு சொல்வது நல்லதா ?
போராட்டத்தின் உச்சத்திற்கே
மிதந்து இருப்போம் !!
ஒரு காலகட்டத்தில்
அறிவும் மனதும் நெருங்கிவிடும்
அந்த தருணமே சிறந்த விளக்கம் !!

Thursday, November 25, 2010

~~ என்னை தேடுகிறேன் ~~

தொலைந்த அந்த பொழுதுகள்
பதறாமல் விளையாடிய நாட்கள் !!
எங்கிருந்தது அந்த துணிச்சல்
யாரிடமும் தயங்காமல் கேட்பது !!
யார் வந்து கேட்டாலும்
முடியாது என்று பதிலில்லை !!
என்னை யோசிக்காமல்
பிறருக்காக தேய்கிறேன் !!
வலிமை தேடுகிறேன்
இளமையை ரசிக்கிறேன் !!

Thursday, November 11, 2010

~~ முடிவுகளின் தொடக்கம் ~~

இரவு முடிந்ததால்
வெளிச்சம் பிறந்தது !!
இதயம் கனிந்ததால்
முகம் மலர்ந்தது !!
தெளிவு வந்ததால்
நம்பிக்கை தோன்றியது !!
உரிமையை மீட்க
புரட்சி வெடித்தது **

Wednesday, November 3, 2010

~~மழை வரும் ~~

ஒவ்வொரு முறையும்
உன்னை மகிழ்விக்க
என்னை இழந்தேன் !
தோல்வி வரலாம்
என்று தெரிந்தும்
விளையாடி பார்த்தேன் !!
எத்தனை நாள்தான்
வெயில் அடிக்கும்
என்றாவது மழை வரும்
என்ற நம்பிக்கையோடு ***

Monday, November 1, 2010

~~ இன்னும் ஒரு முயற்சி ~~

ஒரு தடவை முயற்சி செய்
எதுவும் எளிதல்ல என்று தெரியும் !
மறுமுறை முயற்சி செய்
வெற்றியின் அருகில் நாமென்று புரியும் !!
விடாமுயற்சி செய்து பார்
வானம் தொட்டுவிடும் தொலைவில்தானே?

Thursday, September 9, 2010

@@ எதிர்பாராமல் நிகழ்ந்தது @@

அவள் அழைத்த நேரம்
வேலையில் நான் இருந்தேன் !!
பணி மறந்து போனேன்
பனி பேச்சில் நனைந்ததால் !!
சரியாக துடித்த இதயம்
சற்று வேகமாக இசைந்தது !!
குளிர்சாதனம் இருந்தும் வியர்வை
எட்டிப்பார்க்க நேரம் எடுக்கவில்லை !!