Thursday, January 21, 2010

கடைசி நிமிடம்


தொலைத்தேன் என்னை
உன்னை கண்டவுடன்!!
தொலைந்தேன் கண்ணே
உன்மொழியை கேட்டவுடன்!!
பிடித்தேன் உன்கரத்தை
மறந்தேன் உலகத்தை!!
தேடுகிறேன் என்
கடைசி நிமிடத்தை!!

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் (2010)



ஆயிரத்தில் ஒருவன் தமிழ் பட வரலாற்றில் வித்தியாசமான முயற்சி.படத்தின் முதல் பாதி தொல்பொருள் ஆராய்ச்சி,தொழிலாளிகளை முதலாளிகள் நடத்தும் விதம்,பணத்தின் அருமை,பெண்ணின் குணம்,ஆணின் மனம்,வீரம் என்று வித விதமாக வேகமாக செல்கிறது.இரண்டாம் பகுதி சோழன் கண்ட புது தேசம் தேடி சென்ற பாண்டியனின் புராணம்.சோழ மன்னனுக்காக மக்கள் சிந்தும் நரபலி.மீண்டும் தஞ்சையை ஆளப்போகும் சோழ மன்னனின் மிதப்பு.போர் புரியும் விதம்.நவீன படையுடன் சோழர்கள் நடத்தும் போர்.இறுதியில் சோழனின் பயணம் தொடரும் என்று நிறைவு பெற்றது.
படத்தின் + ரீமாசென் நடனம்,நடிப்பு.பார்த்திபனின் தோற்றம்,மெய் மறந்து ஆடும் ஆட்டம்.கார்த்தியின் வசனம்,நடிப்பு.+++ செல்வராகவனின் புது முயற்சிக்கு அடுத்த சோழ பயணம் தொடரும் என்று நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த பயணத்தை.

Wednesday, January 13, 2010

காணும் பொங்கல்


பொங்கல் தை மாதத்தில்
உன் நினைவோ விமான வேகத்தில்!!
உன்னை கண்டு பல மாதம்
நாட்கள் நடந்ததோ ஆமைபோல!!
காணும் பொங்கலன்று காணவருவேன்
உன்னை கண்டதும் குழந்தையாவேன்!!

Monday, January 11, 2010

ரசித்தது



பனி படர்ந்த காலை
உன் புன்னகையோ சோலை!!
ஆதவன் சிரித்த நேரம்
நீ துயிலெழும் கோலம்!!
நான் எழுதிவைத்த கவிதையை
உன் உச்சரிப்பால் உயிர்பெற்றது!!
தென்றல் வீசும் மாலையை மறந்தேன்

நீ
பார்த்ததால் மீண்டும் பிறந்தேன்!!

Sunday, January 10, 2010

தோல்விகள்

வெற்றியின் படிதான் தோல்வி
தோல்வியின் மறுபெயர் வெற்றி !!
சிறுவயதில் விளையாடி தோற்றேன்
பின்னர் விவரமாய் வென்றேன் !!
படிக்கும் வயதில் ஒரு தோல்வி
பிறகு முயற்சி வளர்த்தேன் நல்ல செய்தி!!
வேலை தேடியபோது படுதோல்வி
அன்று நன்னம்பிக்கை பிறந்த நேரம்!!
தோல்விகள் சுமையில்லை நண்பா
அது வெற்றிக்கனி பிடிக்கும் காலம்!!

Thursday, January 7, 2010

தை ! விதை !! கவிதை !!!

என்னில் உதித்த மொழியே
எண்ணில் அடங்கா தமிழே!!
பருவம் பல்லாண்டுத் தமிழே
தைதான் உனக்கு சிறப்பே!!
உழவர் மகிழும் நாள்
உலகம் செழிக்கும் நாள்!!
இருளும் அழியும் நேரம்
தை பிறக்கும் காலம!!
வறுமையை இனி அழிப்போம்
தைத்திருநாள் சபதம் ஏற்போம்!!