Thursday, June 17, 2010

மௌனம் கலைத்தேன்**

பேசிய நாட்கள்
கரைந்து சென்றது !
பேசாத நொடிகள்
வலித்து துடித்தது !
முதலில் பேசினால்
போதும் என்று
நினைத்து இருந்தேன் !
உன்னுடன் பேசாத
நேரங்களில் உன்னை
சிந்தித்து கொண்டேன் !
மீதமுள்ள காலத்தில்
உன்னுடன் நான்
வாழ்ந்து வந்தேன் !!

Saturday, June 5, 2010

தென்றலை தீண்டவில்லை**

தென்றலை தீண்டவில்லை
கண்களை கவர்ந்திருக்கிறேன் !
சிந்தனை சிதறியது
செய்கையை நோக்கியதால் !
வெண்மை நிலா தோற்றது
உன் புன்னகையை கண்டபின் !
மழை நீராய்
இருக்க ஆசை
உன்னை தொட்டுவிடலாம்
என்ற ஏக்கத்தோடு !!

வறுமை வாட்டியது**

நல்ல பசி
கையில் பணமில்லை !
தகுதியான படிப்பு
இப்போது வேலையில்லை !
சிரித்து பேசியவர்கள்
உதவிக்கு வரவில்லை !
இதுதான் வறுமையா
இன்னும் கொடுமையா !!