தினமும் வாழ்ந்த
வாழ்க்கை போதும்
புதிதாய் ஒன்றை
திறம்பட செய்வோம் !!
வானம் எதுவரை
தொட்டு பார்ப்போம்
பூமி புதையலும்
தேடி எடுப்போம் !!
கவனம் குறையாமல்
லட்சியத்தில் உழைப்போம்
வெற்றி நம்மை
சுற்றித் திரியும் !!
Wednesday, December 15, 2010
Tuesday, December 14, 2010
~~ தளராத போராட்டம் ~~
சில சமயம்
மனதும் அறிவும்
மோதிக்கொள்ளும்
மனம் பயணிப்பது சரியா ?
அறிவு சொல்வது நல்லதா ?
போராட்டத்தின் உச்சத்திற்கே
மிதந்து இருப்போம் !!
ஒரு காலகட்டத்தில்
அறிவும் மனதும் நெருங்கிவிடும்
அந்த தருணமே சிறந்த விளக்கம் !!
மனதும் அறிவும்
மோதிக்கொள்ளும்
மனம் பயணிப்பது சரியா ?
அறிவு சொல்வது நல்லதா ?
போராட்டத்தின் உச்சத்திற்கே
மிதந்து இருப்போம் !!
ஒரு காலகட்டத்தில்
அறிவும் மனதும் நெருங்கிவிடும்
அந்த தருணமே சிறந்த விளக்கம் !!
Thursday, November 25, 2010
~~ என்னை தேடுகிறேன் ~~
தொலைந்த அந்த பொழுதுகள்
பதறாமல் விளையாடிய நாட்கள் !!
எங்கிருந்தது அந்த துணிச்சல்
யாரிடமும் தயங்காமல் கேட்பது !!
யார் வந்து கேட்டாலும்
முடியாது என்று பதிலில்லை !!
என்னை யோசிக்காமல்
பிறருக்காக தேய்கிறேன் !!
வலிமை தேடுகிறேன்
இளமையை ரசிக்கிறேன் !!
பதறாமல் விளையாடிய நாட்கள் !!
எங்கிருந்தது அந்த துணிச்சல்
யாரிடமும் தயங்காமல் கேட்பது !!
யார் வந்து கேட்டாலும்
முடியாது என்று பதிலில்லை !!
என்னை யோசிக்காமல்
பிறருக்காக தேய்கிறேன் !!
வலிமை தேடுகிறேன்
இளமையை ரசிக்கிறேன் !!
Thursday, November 11, 2010
~~ முடிவுகளின் தொடக்கம் ~~
இரவு முடிந்ததால்
வெளிச்சம் பிறந்தது !!
இதயம் கனிந்ததால்
முகம் மலர்ந்தது !!
தெளிவு வந்ததால்
நம்பிக்கை தோன்றியது !!
உரிமையை மீட்க
புரட்சி வெடித்தது **
வெளிச்சம் பிறந்தது !!
இதயம் கனிந்ததால்
முகம் மலர்ந்தது !!
தெளிவு வந்ததால்
நம்பிக்கை தோன்றியது !!
உரிமையை மீட்க
புரட்சி வெடித்தது **
Wednesday, November 3, 2010
~~மழை வரும் ~~
ஒவ்வொரு முறையும்
உன்னை மகிழ்விக்க
என்னை இழந்தேன் !
தோல்வி வரலாம்
என்று தெரிந்தும்
விளையாடி பார்த்தேன் !!
எத்தனை நாள்தான்
வெயில் அடிக்கும்
என்றாவது மழை வரும்
என்ற நம்பிக்கையோடு ***
உன்னை மகிழ்விக்க
என்னை இழந்தேன் !
தோல்வி வரலாம்
என்று தெரிந்தும்
விளையாடி பார்த்தேன் !!
எத்தனை நாள்தான்
வெயில் அடிக்கும்
என்றாவது மழை வரும்
என்ற நம்பிக்கையோடு ***
Monday, November 1, 2010
~~ இன்னும் ஒரு முயற்சி ~~
ஒரு தடவை முயற்சி செய்
எதுவும் எளிதல்ல என்று தெரியும் !
மறுமுறை முயற்சி செய்
வெற்றியின் அருகில் நாமென்று புரியும் !!
விடாமுயற்சி செய்து பார்
வானம் தொட்டுவிடும் தொலைவில்தானே?
எதுவும் எளிதல்ல என்று தெரியும் !
மறுமுறை முயற்சி செய்
வெற்றியின் அருகில் நாமென்று புரியும் !!
விடாமுயற்சி செய்து பார்
வானம் தொட்டுவிடும் தொலைவில்தானே?
Thursday, September 9, 2010
@@ எதிர்பாராமல் நிகழ்ந்தது @@
அவள் அழைத்த நேரம்
வேலையில் நான் இருந்தேன் !!
பணி மறந்து போனேன்
பனி பேச்சில் நனைந்ததால் !!
சரியாக துடித்த இதயம்
சற்று வேகமாக இசைந்தது !!
குளிர்சாதனம் இருந்தும் வியர்வை
எட்டிப்பார்க்க நேரம் எடுக்கவில்லை !!
வேலையில் நான் இருந்தேன் !!
பணி மறந்து போனேன்
பனி பேச்சில் நனைந்ததால் !!
சரியாக துடித்த இதயம்
சற்று வேகமாக இசைந்தது !!
குளிர்சாதனம் இருந்தும் வியர்வை
எட்டிப்பார்க்க நேரம் எடுக்கவில்லை !!
Thursday, June 17, 2010
மௌனம் கலைத்தேன்**
பேசிய நாட்கள்
கரைந்து சென்றது !
பேசாத நொடிகள்
வலித்து துடித்தது !
முதலில் பேசினால்
போதும் என்று
நினைத்து இருந்தேன் !
உன்னுடன் பேசாத
நேரங்களில் உன்னை
சிந்தித்து கொண்டேன் !
மீதமுள்ள காலத்தில்
உன்னுடன் நான்
வாழ்ந்து வந்தேன் !!
கரைந்து சென்றது !
பேசாத நொடிகள்
வலித்து துடித்தது !
முதலில் பேசினால்
போதும் என்று
நினைத்து இருந்தேன் !
உன்னுடன் பேசாத
நேரங்களில் உன்னை
சிந்தித்து கொண்டேன் !
மீதமுள்ள காலத்தில்
உன்னுடன் நான்
வாழ்ந்து வந்தேன் !!
Saturday, June 5, 2010
தென்றலை தீண்டவில்லை**
தென்றலை தீண்டவில்லை
கண்களை கவர்ந்திருக்கிறேன் !
சிந்தனை சிதறியது
செய்கையை நோக்கியதால் !
வெண்மை நிலா தோற்றது
உன் புன்னகையை கண்டபின் !
மழை நீராய்
இருக்க ஆசை
உன்னை தொட்டுவிடலாம்
என்ற ஏக்கத்தோடு !!
கண்களை கவர்ந்திருக்கிறேன் !
சிந்தனை சிதறியது
செய்கையை நோக்கியதால் !
வெண்மை நிலா தோற்றது
உன் புன்னகையை கண்டபின் !
மழை நீராய்
இருக்க ஆசை
உன்னை தொட்டுவிடலாம்
என்ற ஏக்கத்தோடு !!
வறுமை வாட்டியது**
நல்ல பசி
கையில் பணமில்லை !
தகுதியான படிப்பு
இப்போது வேலையில்லை !
சிரித்து பேசியவர்கள்
உதவிக்கு வரவில்லை !
இதுதான் வறுமையா
இன்னும் கொடுமையா !!
கையில் பணமில்லை !
தகுதியான படிப்பு
இப்போது வேலையில்லை !
சிரித்து பேசியவர்கள்
உதவிக்கு வரவில்லை !
இதுதான் வறுமையா
இன்னும் கொடுமையா !!
Monday, May 31, 2010
இறுதி கட்டம் **
முடிந்துவிட்டது என்று
நினைத்திருந்தேன் ஆனால்
ஆட்டம் துவங்கியது
என்னமோ இப்போதுதான் !
களத்தில் வெற்றி
அல்லது தோல்வி
வெற்றியை நோக்கி
நம் பயணம் !!
பல கட்டம்
தாண்டியதால் இந்த
இறுதி கட்டம்
ஒன்னும் பெரிதல்ல !!!
நினைத்திருந்தேன் ஆனால்
ஆட்டம் துவங்கியது
என்னமோ இப்போதுதான் !
களத்தில் வெற்றி
அல்லது தோல்வி
வெற்றியை நோக்கி
நம் பயணம் !!
பல கட்டம்
தாண்டியதால் இந்த
இறுதி கட்டம்
ஒன்னும் பெரிதல்ல !!!
Wednesday, May 26, 2010
என்னுள் உதித்தது**
நீ தொலைவில்
நான் உன்னில்
நம் சந்திப்பு தொடருமா ?
காதலும் காற்றும்
ஒன்றுதான் எப்போது
பிறக்கும் என்று தெரியாது !
உன்னிடம் இருந்த
நாட்கள் என் தாயின்
கருவறையில் இருந்த
சுகத்தை கண்டேன் !!
நான் உன்னில்
நம் சந்திப்பு தொடருமா ?
காதலும் காற்றும்
ஒன்றுதான் எப்போது
பிறக்கும் என்று தெரியாது !
உன்னிடம் இருந்த
நாட்கள் என் தாயின்
கருவறையில் இருந்த
சுகத்தை கண்டேன் !!
Sunday, May 23, 2010
அப்புறம் பேசறேன்**
அவளிடம் கதைகள்
பேசிய நேரமது
என்னையே மறந்த காலமது !
சூரியனும் சந்திரனும்
கடந்து சென்றது
வானவில்லாய் எப்போதும்
நெஞ்சில் பதிந்தாய் !
நான் சொல்லவந்ததை
சொல்ல துணியும்போது
அப்புறம் பேசறேன்
என்று நழுவி சென்றாள் !!
பேசிய நேரமது
என்னையே மறந்த காலமது !
சூரியனும் சந்திரனும்
கடந்து சென்றது
வானவில்லாய் எப்போதும்
நெஞ்சில் பதிந்தாய் !
நான் சொல்லவந்ததை
சொல்ல துணியும்போது
அப்புறம் பேசறேன்
என்று நழுவி சென்றாள் !!
Saturday, May 22, 2010
என்னமோ பண்ணுங்க**
உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு
நீ என் பயணத்தில்தான் இருக்க !
நான் என்ன சொல்லறதுன்னு தெரியல
நீங்க என்னமோ பண்ணுங்க !!
நீ என் பயணத்தில்தான் இருக்க !
நான் என்ன சொல்லறதுன்னு தெரியல
நீங்க என்னமோ பண்ணுங்க !!
யோசித்து சொல்கிறேன் **
இத்தனை நாள் ஏமாற்றியது போதும்
இனி நீ எந்தன் கையில் வேண்டும் !
காலையில் கேட்டால் மாலை என்கிறாய்
மாலையில் கேட்டால் நாளை என்றாய் !!
இனி நீ எந்தன் கையில் வேண்டும் !
காலையில் கேட்டால் மாலை என்கிறாய்
மாலையில் கேட்டால் நாளை என்றாய் !!
Thursday, May 20, 2010
தொட்டும் தொடாமலும் !!
கையில் தொடவில்லை
உன் இதயத்தை தொட்டுவிட்டேன் !
நீ என்னுடன் பேசும்போது
நான் குழந்தையாக கேட்டேன் !
நான் உன்னுடன் உலாவும்போது
நீ மௌனமாய் மலர்ந்தாய் !
உன் பார்வை பட்டதில்
உலக பார்வை மறைந்தது !
உன் இதயத்தை தொட்டுவிட்டேன் !
நீ என்னுடன் பேசும்போது
நான் குழந்தையாக கேட்டேன் !
நான் உன்னுடன் உலாவும்போது
நீ மௌனமாய் மலர்ந்தாய் !
உன் பார்வை பட்டதில்
உலக பார்வை மறைந்தது !
Monday, April 26, 2010
என்ன சொல்கிறாய் ?
புதிதாய் பார்த்தேன் உன்னை
முழுதாய் தொலைத்தேன் என்னை !
அலைபேசியில் நாம் அலசியதால்
எந்தின வாழ்கையை மறந்தேன் !
நான் உனக்கு என்னவென்று
நீ கேட்டாய்,என் மறுஉயிர்
என்று சொன்னேன் !
நீ அதற்கு சொன்னாய்
நாம் நண்பர்கள் என்று !!
இன்னும் எத்தனை நாளைக்கு
நண்பர்கள் வேடம் ??
முழுதாய் தொலைத்தேன் என்னை !
அலைபேசியில் நாம் அலசியதால்
எந்தின வாழ்கையை மறந்தேன் !
நான் உனக்கு என்னவென்று
நீ கேட்டாய்,என் மறுஉயிர்
என்று சொன்னேன் !
நீ அதற்கு சொன்னாய்
நாம் நண்பர்கள் என்று !!
இன்னும் எத்தனை நாளைக்கு
நண்பர்கள் வேடம் ??
Saturday, April 24, 2010
சந்தோசமே @@
கல்லூரிப் படிப்பை
முடித்ததை மறந்தேன் !
உன்னை கண்ட
நாளை பதித்தேன் !!
உலகை விலை
கொடுத்து வாங்கிடலாம் !
உன் மனதில் எனக்கு
எப்போது இடம் தருவாய் !!
யாரோ யாருடனோ
செல்லும்போது நான்
எப்போது உன்னுடன்
என எண்ணினேன் !!
பாலைவனத்தில் தண்ணீர்
கண்டதுபோல் உன்விழியின்
வழியில் செல்ல
எனக்கு சந்தோசமே !!
முடித்ததை மறந்தேன் !
உன்னை கண்ட
நாளை பதித்தேன் !!
உலகை விலை
கொடுத்து வாங்கிடலாம் !
உன் மனதில் எனக்கு
எப்போது இடம் தருவாய் !!
யாரோ யாருடனோ
செல்லும்போது நான்
எப்போது உன்னுடன்
என எண்ணினேன் !!
பாலைவனத்தில் தண்ணீர்
கண்டதுபோல் உன்விழியின்
வழியில் செல்ல
எனக்கு சந்தோசமே !!
Friday, April 16, 2010
நட்சத்திரமே****
நீ வானில் இருக்கும் நட்சத்திரமா
என்னில் நுழைந்த விசித்திரமா !
வானிற்கு கிடைத்தது கோடி நட்சத்திரம்
நான் கண்டதோ உலக சித்திரம் !
வெண்மையான நட்சத்திரத்தை கண்டதுண்டு
வானவில் நட்சத்திரத்தை
உன்வடிவில் பார்த்தேன் !
காலையில் பயணம் ஆதவனுடன்
இரவுப் பயணம் நட்சத்திரத்துடன் !
நட்சத்திரமும் நிறம் மாறும்
உன் புன்னகையில் மெய்மறந்ததால் !!
என்னில் நுழைந்த விசித்திரமா !
வானிற்கு கிடைத்தது கோடி நட்சத்திரம்
நான் கண்டதோ உலக சித்திரம் !
வெண்மையான நட்சத்திரத்தை கண்டதுண்டு
வானவில் நட்சத்திரத்தை
உன்வடிவில் பார்த்தேன் !
காலையில் பயணம் ஆதவனுடன்
இரவுப் பயணம் நட்சத்திரத்துடன் !
நட்சத்திரமும் நிறம் மாறும்
உன் புன்னகையில் மெய்மறந்ததால் !!
Monday, April 12, 2010
சித்திரை @@
சித்திரையாய் நீ வந்தாய்
பனித்துளியாய் எப்போது மாறுவாய் !
நான் உதயம் ஆவது உனக்காக
நீ மறைந்து நிற்பது எதற்காக !
மழைநீர் இல்லாமல் மண்வாடும்
நீ அல்லாமல் நான் வாடினேன் !
உடல் என்னுடன் இருக்கிறது
உயிர் உன்னுடன் தொலைந்தது !!
பனித்துளியாய் எப்போது மாறுவாய் !
நான் உதயம் ஆவது உனக்காக
நீ மறைந்து நிற்பது எதற்காக !
மழைநீர் இல்லாமல் மண்வாடும்
நீ அல்லாமல் நான் வாடினேன் !
உடல் என்னுடன் இருக்கிறது
உயிர் உன்னுடன் தொலைந்தது !!
Thursday, April 8, 2010
ஓவியமே **
நான் வரைந்து வைத்த ஓவியமே
யாரும் எழுதாத காவியமே !
மாதத்தில் ஒரு நாள் முழுநிலவு
உன்னால் மாதமே புதுபொழிவு !
கல்லை செதுக்கினால் சிற்பம் கிடைக்கும்
உன்னை பார்த்தால் மறுபிறவி உண்டாகும் !
உயிர் எதுவரை என்று தெரியவில்லை
பயணம் உன்னுடன் என்று சொல்கிறது !!
யாரும் எழுதாத காவியமே !
மாதத்தில் ஒரு நாள் முழுநிலவு
உன்னால் மாதமே புதுபொழிவு !
கல்லை செதுக்கினால் சிற்பம் கிடைக்கும்
உன்னை பார்த்தால் மறுபிறவி உண்டாகும் !
உயிர் எதுவரை என்று தெரியவில்லை
பயணம் உன்னுடன் என்று சொல்கிறது !!
Thursday, April 1, 2010
தென்றல் வீசியது !
மாதக் கணக்கில்
முடங்கிக் கிடந்தேன்
என் தென்றலுக்காக !
ஒரு மாலை
நேரத்தில் அனுமதிகேட்டேன்
அதை காணுவதற்காக !
தென்றல் என்
வீட்டிற்கு வந்தது !
ஆனால் அது
சென்றது சுனாமிபோல !
இனி பூங்காற்று
அழைக்க வேண்டும்
இன்றைய இளைஞனை
நாளைய நாயகனை !!
முடங்கிக் கிடந்தேன்
என் தென்றலுக்காக !
ஒரு மாலை
நேரத்தில் அனுமதிகேட்டேன்
அதை காணுவதற்காக !
தென்றல் என்
வீட்டிற்கு வந்தது !
ஆனால் அது
சென்றது சுனாமிபோல !
இனி பூங்காற்று
அழைக்க வேண்டும்
இன்றைய இளைஞனை
நாளைய நாயகனை !!
Tuesday, March 30, 2010
புரட்சி **
உண்மை உழைப்புக்கு உறக்கமில்லை
தமிழில் பேச தயக்கமில்லை !
ஒருமுறை ஜெயித்தால் வெற்றியில்லை
தினமும் வென்றால் தோல்வியில்லை !!
நீதிக்கு கவலையில்லை
அன்புக்கு அளவில்லை !
சமத்துவம் எட்டும்வரை
புரட்சி ஓயவில்லை !!
தமிழில் பேச தயக்கமில்லை !
ஒருமுறை ஜெயித்தால் வெற்றியில்லை
தினமும் வென்றால் தோல்வியில்லை !!
நீதிக்கு கவலையில்லை
அன்புக்கு அளவில்லை !
சமத்துவம் எட்டும்வரை
புரட்சி ஓயவில்லை !!
மௌனமே
மௌனம் சில நேரம் தீயாகும்
மௌனம் பல நேரம் புயலாகும் !
அவள் பேசும்போது
மௌனமாய் இருப்பேன்
அவள் அமைதி ஆகிடும்போது
நான் வெடித்திருவேன் !
மொட்டுக்கள் மௌனமாக மலர்கின்றன
மெட்டுகள் மௌனமாக பிறகின்றன!
புயலுக்கு பின் அமைதி
புரட்சிக்கு பின் மௌனமே !!
மௌனம் பல நேரம் புயலாகும் !
அவள் பேசும்போது
மௌனமாய் இருப்பேன்
அவள் அமைதி ஆகிடும்போது
நான் வெடித்திருவேன் !
மொட்டுக்கள் மௌனமாக மலர்கின்றன
மெட்டுகள் மௌனமாக பிறகின்றன!
புயலுக்கு பின் அமைதி
புரட்சிக்கு பின் மௌனமே !!
Friday, March 26, 2010
பசுமையே****
பழைய துணியை அணிந்த
நாட்களை மறக்க முடியுமா !
பசிக்கு உணவு இல்லை
ருசிக்கு இனிப்பு இல்லை
பழக நண்பர் இருந்தனர் பசுமையாக !!
அணைக்க அம்மா இல்லை
அழைக்க அக்கா இல்லை
வழியெங்கும் நண்பர் துயர் துடைக்க !!
ஒரு நாற்காலியில் இருவர்
இடம் பொருள் பார்க்கவில்லை
இடைமொழி கேட்கவில்லை !!
பசுமை நிறைந்த ஞாபகங்கள்
நம் பயணத்தில் ஒரு மகிழ்ச்சி !!
நாட்களை மறக்க முடியுமா !
பசிக்கு உணவு இல்லை
ருசிக்கு இனிப்பு இல்லை
பழக நண்பர் இருந்தனர் பசுமையாக !!
அணைக்க அம்மா இல்லை
அழைக்க அக்கா இல்லை
வழியெங்கும் நண்பர் துயர் துடைக்க !!
ஒரு நாற்காலியில் இருவர்
இடம் பொருள் பார்க்கவில்லை
இடைமொழி கேட்கவில்லை !!
பசுமை நிறைந்த ஞாபகங்கள்
நம் பயணத்தில் ஒரு மகிழ்ச்சி !!
~~ நினைவே ~~
நினைவே நீ நிஜமா
காலையும் மாலையும் உதயமாகிறாய் !
நினைவே நீ மெய்யா
நித்தமும் என்னுடன் உறங்குகிறாய் !
நினைவே நீ அழகா
தோன்றும்போது வெளிச்சம் தருகிறாய் !
நினைவே நீ உயிரா
சுவாசமாக என்னுடன் இருக்கிறாய் !
நினைவே நீ மொழியா
தமிழாக இளமையாய் வாழ்கிறாய் !!
காலையும் மாலையும் உதயமாகிறாய் !
நினைவே நீ மெய்யா
நித்தமும் என்னுடன் உறங்குகிறாய் !
நினைவே நீ அழகா
தோன்றும்போது வெளிச்சம் தருகிறாய் !
நினைவே நீ உயிரா
சுவாசமாக என்னுடன் இருக்கிறாய் !
நினைவே நீ மொழியா
தமிழாக இளமையாய் வாழ்கிறாய் !!
Thursday, March 25, 2010
மொழி எங்கே ?
தேன்கூட அதிகமானால் தெவிட்டும்
வானம்போல் எப்போதும் நீ இருக்கிறாய் !
உன்னுடன் என் உயிர் இருபதனால்
எனக்கு என் மீது கவலையில்லை !
உன்னை ஒரு உலகம் என்றால்
உன் உயிர்த்துடிப்பாய் நான் இருப்பேன் !
கவிதை எழுத வரைமுறை இல்லை
உன்னழகை வர்ணிக்க மொழி எங்கே ?
துள்ளி ஓடும் முயலும் நின்றது
எந்தன் மானை கண்டதினால் !!
வானம்போல் எப்போதும் நீ இருக்கிறாய் !
உன்னுடன் என் உயிர் இருபதனால்
எனக்கு என் மீது கவலையில்லை !
உன்னை ஒரு உலகம் என்றால்
உன் உயிர்த்துடிப்பாய் நான் இருப்பேன் !
கவிதை எழுத வரைமுறை இல்லை
உன்னழகை வர்ணிக்க மொழி எங்கே ?
துள்ளி ஓடும் முயலும் நின்றது
எந்தன் மானை கண்டதினால் !!
Friday, March 12, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா!!(திரை விமர்சனம்)
காதல் கதை.ரசிக்கும் காட்சி.A R ரஹ்மான் இசை.+++
பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு இயல்பான காதல் படம்.முன் பாதி படம் அருமையாக செல்கிறது.பின் பாதி கொஞ்சம் வேகம் குறைவு ஆனால் கெளதம் இயக்கத்தினால் படம் தெளிவாக முற்று பெறுகிறது .சிம்புவின் நடிப்பு எதார்த்தம் .படத்தின் காட்சிகள் நன்று."அந்த நேரம் அந்தி நேரம்" பாடல் பிரமாதம்.
பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு இயல்பான காதல் படம்.முன் பாதி படம் அருமையாக செல்கிறது.பின் பாதி கொஞ்சம் வேகம் குறைவு ஆனால் கெளதம் இயக்கத்தினால் படம் தெளிவாக முற்று பெறுகிறது .சிம்புவின் நடிப்பு எதார்த்தம் .படத்தின் காட்சிகள் நன்று."அந்த நேரம் அந்தி நேரம்" பாடல் பிரமாதம்.
Friday, February 12, 2010
##அமுதே##
மழை நீர் மட்டும் உன்னை தொடலாம் உன் நிழலாக இருக்கும் நான் தீண்டக் கூடாதா? தோழியின் சைக்கிளில் நீ போகிறாய் என் பைக்கில் ஏற ஏன் மறுக்கிறாய் ? போகிப் பண்டிகையில் பழையதை எரித்தாய் நான் தந்த வழயல் ஏன் மறைத்தாய் ? தொலைவில் பார்த்தால் புன்னகை தருகிறாய் அருகில் வந்தால் எரிமலை ஆகிறாய்!! அன்பினால் அமுதையும் வாங்கி விடலாம் உன் கண்களிலிருந்து உண்மையை உணர முடியாது !!
~~அலையே~~
சூரியன் சுட்டும் துயிலாத நான்
உன்னை காண்பதற்காக ஆதவனை அழைத்தேன் !
பெரியார் தெருவில் வராத நான்
உன்னை பார்த்தபின் தினமும் தொடர்ந்தேன் !
நீல உடையில் ஒரு அலை
என் நிலையோ உன் விடை !
கானமயில் மாலையில் ஆட
உன்நினவில் நான் வாடினேன் !
கடலில் அலை சிலநேரம் அடிக்கும்
என்னில் எப்போதும் ஏனடிகிறாய் அலையாய் ?
உன்னை காண்பதற்காக ஆதவனை அழைத்தேன் !
பெரியார் தெருவில் வராத நான்
உன்னை பார்த்தபின் தினமும் தொடர்ந்தேன் !
நீல உடையில் ஒரு அலை
என் நிலையோ உன் விடை !
கானமயில் மாலையில் ஆட
உன்நினவில் நான் வாடினேன் !
கடலில் அலை சிலநேரம் அடிக்கும்
என்னில் எப்போதும் ஏனடிகிறாய் அலையாய் ?
தமிழே !!
மொழி எனக்கு பிடித்தது
உன்னை நான் விரும்பியதால்!
கவிதை எனக்குள் பிறந்தது
உன்னழகை நான் ரசித்ததால்!
திரைப்படம் பார்க்க பழகினேன்
உன்பிம்பம் திரையினில் தெரிவதால்!
தமிழ் என்னுள் கலந்தது
உயிர்மெயாக நீ இருந்ததால்!!
உன்னை நான் விரும்பியதால்!
கவிதை எனக்குள் பிறந்தது
உன்னழகை நான் ரசித்ததால்!
திரைப்படம் பார்க்க பழகினேன்
உன்பிம்பம் திரையினில் தெரிவதால்!
தமிழ் என்னுள் கலந்தது
உயிர்மெயாக நீ இருந்ததால்!!
**உன்னுடன் நான்**
நிலாச்சோறு ஊட்டியது ஞாபகமில்லை
நிலவை மறப்பது சுலபமில்லை!
மழையின் சத்தம கேட்கவில்லை
கொலுசின் சத்தம புன்னகை செய்தது!
என்னை நான் தேடினேன்
உன்னை கண்டு வியந்தேன்!
இருள் சுத்தமாய் அகன்றது
நீ என்னிடம் இருபதினால்!
சுதந்திரம் எனக்கு கிடைத்தது
உன்னிடம் நான் சரணடைந்ததினால்!!
நிலவை மறப்பது சுலபமில்லை!
மழையின் சத்தம கேட்கவில்லை
கொலுசின் சத்தம புன்னகை செய்தது!
என்னை நான் தேடினேன்
உன்னை கண்டு வியந்தேன்!
இருள் சுத்தமாய் அகன்றது
நீ என்னிடம் இருபதினால்!
சுதந்திரம் எனக்கு கிடைத்தது
உன்னிடம் நான் சரணடைந்ததினால்!!
@@ அழகிய சகியே @@
தீயை தொட்டேன் சுடவில்லை
உன் முகத்தை பார்பதனால் !
நண்பன் அழைத்தான் பார்கவில்லை
நீ என்னை கவனித்ததால் !
கால நிலை மாறியது தெரியவில்லை
நான் உன்னை சுற்றியதால் !
காலை உணவு உண்ணவில்லை
மதிய உணவிலும் மயக்கமில்லை !
அழகிய சகியை பார்த்தபின்
இரவு பசியும் மறந்துபோனது !!
உன் முகத்தை பார்பதனால் !
நண்பன் அழைத்தான் பார்கவில்லை
நீ என்னை கவனித்ததால் !
கால நிலை மாறியது தெரியவில்லை
நான் உன்னை சுற்றியதால் !
காலை உணவு உண்ணவில்லை
மதிய உணவிலும் மயக்கமில்லை !
அழகிய சகியை பார்த்தபின்
இரவு பசியும் மறந்துபோனது !!
$$ மறந்த காலம் $$
சுவாசிக்கும் நேரம் தெரியும் ஆனால்
உன் வருகையின் காலம் தெரியாது !
குழந்தைகளின் நிலையை அறிவேன்
உன் நினைப்பை அறிய முடியாது !
மலரின் வாசனையை உணர்வேன்
உன் ரசனை புரியவில்லை !
மழை வரும் என்று தெரிந்தேன்
நீ புன்னகைப்பாயா இன்று அறியவில்லை !
என் உயிர்த்துடிப்பை மறந்தேன்
உன்னில் நனைந்து மகிழ்ந்ததில் !!
உன் வருகையின் காலம் தெரியாது !
குழந்தைகளின் நிலையை அறிவேன்
உன் நினைப்பை அறிய முடியாது !
மலரின் வாசனையை உணர்வேன்
உன் ரசனை புரியவில்லை !
மழை வரும் என்று தெரிந்தேன்
நீ புன்னகைப்பாயா இன்று அறியவில்லை !
என் உயிர்த்துடிப்பை மறந்தேன்
உன்னில் நனைந்து மகிழ்ந்ததில் !!
** கவிதை பிறந்தது **
காலையில் ஆதவன்
தோன்றுவதை ரசித்தேன்
அப்போதுதான் அவள் உதயமாவாள் !
மாலையில் மழைகாற்றில் நனைந்தேன்
என்னை அவள்
கடந்த நேரமது !
கனவில் அவள் சிரித்தால்
அவளைதொட தைரியம் வந்தது !
சூரியன் சுடவில்லை
ஏனென்று புரியவில்லை !
மழைநீர் விழுந்தது
மாற்றம் தெரியவில்லை !
உன்னை பார்த்தேன்
உண்மை தெரிந்தது !
உன்னை புரிந்தேன்
கவிதை பிறந்தது !!
தோன்றுவதை ரசித்தேன்
அப்போதுதான் அவள் உதயமாவாள் !
மாலையில் மழைகாற்றில் நனைந்தேன்
என்னை அவள்
கடந்த நேரமது !
கனவில் அவள் சிரித்தால்
அவளைதொட தைரியம் வந்தது !
சூரியன் சுடவில்லை
ஏனென்று புரியவில்லை !
மழைநீர் விழுந்தது
மாற்றம் தெரியவில்லை !
உன்னை பார்த்தேன்
உண்மை தெரிந்தது !
உன்னை புரிந்தேன்
கவிதை பிறந்தது !!
^^ காலை கனவு ^^
சூரியன் சாயும் பொழுது
நிலா சாலையில் வரும் !
என் எண்ணை தொலைத்தாலும்
என்னவள் இளமையை
வண்ண வண்ணமாய்
காண்பதை மறக்கமாட்டேன் !
என் அலைபேசி
சினுங்கியது அழைத்தது
அவள்தான் வீட்டிற்கு
அழைத்தாள் ஆசையோடு சென்றேன் !
அருகில் அழைத்தாள்
அன்போடு சென்றேன் !
அணைக்க முயற்சித்தேன்
என் கையை சுட்டது
காலை காபி !!
நிலா சாலையில் வரும் !
என் எண்ணை தொலைத்தாலும்
என்னவள் இளமையை
வண்ண வண்ணமாய்
காண்பதை மறக்கமாட்டேன் !
என் அலைபேசி
சினுங்கியது அழைத்தது
அவள்தான் வீட்டிற்கு
அழைத்தாள் ஆசையோடு சென்றேன் !
அருகில் அழைத்தாள்
அன்போடு சென்றேன் !
அணைக்க முயற்சித்தேன்
என் கையை சுட்டது
காலை காபி !!
## பருவ நிலை ##
பருவம் பதினாறு கடந்தேன்
பத்தாம் வகுப்பை முடித்தேன் !
புதுமை பதினெட்டை கண்டேன்
கல்லூரி படிப்பிற்கு சென்றேன் !
இளமை இருபதை அடைந்தேன்
பயமறியா காளையாய் திரிந்தேன் !
கால் நூற்றாண்டு தொட்டேன்
கல்யாணம் எப்போது என்றார்கள் !
பல பருவம் விரும்பினேன்
எனை எப்போது
என்னவள் நேசிப்பால்?
பத்தாம் வகுப்பை முடித்தேன் !
புதுமை பதினெட்டை கண்டேன்
கல்லூரி படிப்பிற்கு சென்றேன் !
இளமை இருபதை அடைந்தேன்
பயமறியா காளையாய் திரிந்தேன் !
கால் நூற்றாண்டு தொட்டேன்
கல்யாணம் எப்போது என்றார்கள் !
பல பருவம் விரும்பினேன்
எனை எப்போது
என்னவள் நேசிப்பால்?
Thursday, January 21, 2010
கடைசி நிமிடம்
Monday, January 18, 2010
ஆயிரத்தில் ஒருவன் (2010)

ஆயிரத்தில் ஒருவன் தமிழ் பட வரலாற்றில் வித்தியாசமான முயற்சி.படத்தின் முதல் பாதி தொல்பொருள் ஆராய்ச்சி,தொழிலாளிகளை முதலாளிகள் நடத்தும் விதம்,பணத்தின் அருமை,பெண்ணின் குணம்,ஆணின் மனம்,வீரம் என்று வித விதமாக வேகமாக செல்கிறது.இரண்டாம் பகுதி சோழன் கண்ட புது தேசம் தேடி சென்ற பாண்டியனின் புராணம்.சோழ மன்னனுக்காக மக்கள் சிந்தும் நரபலி.மீண்டும் தஞ்சையை ஆளப்போகும் சோழ மன்னனின் மிதப்பு.போர் புரியும் விதம்.நவீன படையுடன் சோழர்கள் நடத்தும் போர்.இறுதியில் சோழனின் பயணம் தொடரும் என்று நிறைவு பெற்றது.
படத்தின் + ரீமாசென் நடனம்,நடிப்பு.பார்த்திபனின் தோற்றம்,மெய் மறந்து ஆடும் ஆட்டம்.கார்த்தியின் வசனம்,நடிப்பு.+++ செல்வராகவனின் புது முயற்சிக்கு அடுத்த சோழ பயணம் தொடரும் என்று நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த பயணத்தை.
Wednesday, January 13, 2010
காணும் பொங்கல்
Monday, January 11, 2010
ரசித்தது
Sunday, January 10, 2010
தோல்விகள்
வெற்றியின் படிதான் தோல்வி
தோல்வியின் மறுபெயர் வெற்றி !!
சிறுவயதில் விளையாடி தோற்றேன்
பின்னர் விவரமாய் வென்றேன் !!
படிக்கும் வயதில் ஒரு தோல்வி
பிறகு முயற்சி வளர்த்தேன் நல்ல செய்தி!!
வேலை தேடியபோது படுதோல்வி
அன்று நன்னம்பிக்கை பிறந்த நேரம்!!
தோல்விகள் சுமையில்லை நண்பா
அது வெற்றிக்கனி பிடிக்கும் காலம்!!
தோல்வியின் மறுபெயர் வெற்றி !!
சிறுவயதில் விளையாடி தோற்றேன்
பின்னர் விவரமாய் வென்றேன் !!
படிக்கும் வயதில் ஒரு தோல்வி
பிறகு முயற்சி வளர்த்தேன் நல்ல செய்தி!!
வேலை தேடியபோது படுதோல்வி
அன்று நன்னம்பிக்கை பிறந்த நேரம்!!
தோல்விகள் சுமையில்லை நண்பா
அது வெற்றிக்கனி பிடிக்கும் காலம்!!
Thursday, January 7, 2010
தை ! விதை !! கவிதை !!!
என்னில் உதித்த மொழியே
எண்ணில் அடங்கா தமிழே!!
பருவம் பல்லாண்டுத் தமிழே
தைதான் உனக்கு சிறப்பே!!
உழவர் மகிழும் நாள்
உலகம் செழிக்கும் நாள்!!
இருளும் அழியும் நேரம்
தை பிறக்கும் காலம!!
வறுமையை இனி அழிப்போம்
தைத்திருநாள் சபதம் ஏற்போம்!!
எண்ணில் அடங்கா தமிழே!!
பருவம் பல்லாண்டுத் தமிழே
தைதான் உனக்கு சிறப்பே!!
உழவர் மகிழும் நாள்
உலகம் செழிக்கும் நாள்!!
இருளும் அழியும் நேரம்
தை பிறக்கும் காலம!!
வறுமையை இனி அழிப்போம்
தைத்திருநாள் சபதம் ஏற்போம்!!
Subscribe to:
Posts (Atom)


