Friday, February 12, 2010

** கவிதை பிறந்தது **

காலையில் ஆதவன்
தோன்றுவதை ரசித்தேன்
அப்போதுதான் அவள் உதயமாவாள் !
மாலையில் மழைகாற்றில் நனைந்தேன்
என்னை அவள்
கடந்த நேரமது !
கனவில் அவள் சிரித்தால்
அவளைதொட தைரியம் வந்தது !
சூரியன் சுடவில்லை
ஏனென்று புரியவில்லை !
மழைநீர் விழுந்தது
மாற்றம் தெரியவில்லை !
உன்னை பார்த்தேன்
உண்மை தெரிந்தது !
உன்னை புரிந்தேன்
கவிதை பிறந்தது !!

No comments: