Friday, February 12, 2010

$$ மறந்த காலம் $$

சுவாசிக்கும் நேரம் தெரியும் ஆனால்
உன் வருகையின் காலம் தெரியாது !
குழந்தைகளின் நிலையை அறிவேன்
உன் நினைப்பை அறிய முடியாது !
மலரின் வாசனையை உணர்வேன்
உன் ரசனை புரியவில்லை !
மழை வரும் என்று தெரிந்தேன்
நீ புன்னகைப்பாயா இன்று அறியவில்லை !
என் உயிர்த்துடிப்பை மறந்தேன்
உன்னில் நனைந்து மகிழ்ந்ததில் !!

No comments: