Friday, April 16, 2010

நட்சத்திரமே****

நீ வானில் இருக்கும் நட்சத்திரமா
என்னில் நுழைந்த விசித்திரமா !
வானிற்கு கிடைத்தது கோடி நட்சத்திரம்
நான் கண்டதோ உலக சித்திரம் !
வெண்மையான நட்சத்திரத்தை கண்டதுண்டு
வானவில் நட்சத்திரத்தை
உன்வடிவில் பார்த்தேன் !
காலையில் பயணம் ஆதவனுடன்
இரவுப் பயணம் நட்சத்திரத்துடன் !
நட்சத்திரமும் நிறம் மாறும்
உன் புன்னகையில் மெய்மறந்ததால் !!

No comments: